உன்னைப் போலவே உருமாலை கட்டி
உன்னைப் போலவே மீசை வெட்டி
உன்னைப் போலவே பாட்டும் கட்டினேன், பாரதி
உன்னைப் போலவே
எனக்கும் வயிற்றில் ஈரத் துணி.
-- வளர்கவி ராதாகிருஷ்ணன்
விடுமுறையில் மாமா வீட்டு அலமாரியில் இருந்து எடுத்துப் படித்த புத்தகங்கள்.
பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி என அலைந்து திரிந்து குறிப்புகள் எடுக்கையில் உறைய வைத்த கவிதைகள்
படித்தவை, பயின்றவை, கேட்டவை என எத்தனையோ பாடல்கள்
கல்லூரி, கணினி, பணி, பட்டம் எனத் தொடர்ந்த பயணத்தில் மறந்தவை பல; நெஞ்சில் நிலைத்தவை பல
இதோ அவற்றில் இருந்து சில
[பல கவிதைகளின் ஆசிரியர் பெயர்கள் நினைவில் இல்லை. படைப்பின் பெருமை முன், படைத்தவன் பெயர் ஒன்றும் பெரிதல்ல என்பதால் அவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன்]